
இண்டிகோகோவில் Amazfit X ஸ்மார்ட்வாட்சை வாக்குறுதியளித்தபடி ஹுவாமி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது 2.07 இன்ச்(206 x 640 பிக்சல்கள்) 326 ppi 92 ° வளைந்த டிஸ்ப்ளே உங்கள் மணிக்கட்டில் சுற்றிலும் மூடப்பட்டிருக்கும். இதை அடைய 700 ° C சூடான வளைக்கும் FPC- இணைக்கப்பட்ட மூன்று-துண்டு மதர்போர்டைப் பயன்படுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. எனவே இது பயன்பாடுகளுக்கு அதிக இடத்தையும், குறைந்த நேரம் ஸ்க்ரோலிங் செலவழிக்கிறது. தங்கள் வசதிக்கேற்ப வாட்ச் முகங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இது உங்கள் படிகளைக் கண்காணித்தும் மற்றும் உங்கள் இதயத் துடிப்பை 24 மணி நேரமும் கண்காணித்து உங்கள் இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிட அகச்சிவப்பு ஒளி சோதனையைக் கொண்டுள்ளது. மேலும் 5ATM (50 மீட்டர்) நீர் எதிர்ப்புத் திறன்,9 பல்துறை விளையாட்டு முறைகள், புளூடூத் 5.0 LE, GPS + GLONASS ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதில் பொத்தான்கள் இல்லை எனவே இது ஒரு அழுத்தம்-உணர்திறன் சென்சார் கொண்டிருக்கிறது, இது உங்கள் விரலின் அழுத்தினால் எல்லாவற்றையும் அணுக உதவுகிறது.மேலும் நேரம், செயல்பாடுகள், வானிலை, பயன்பாடுகளிலிருந்து அறிவிப்புகள், அழைப்புகள், SpO2 இரத்த ஆக்ஸிஜன் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார், இடைவிடாத நினைவூட்டல், Tri-axis Accelerometer + Tri-axis Gyro, டிஜிட்டல் மைக்ரோபோன் என்ற பலவற்றைக் காட்டுகிறது.
இதன் பரிமாணங்கள்: 22.6 × 13.6 மிமீ, எடை: 39 கிராம் கொண்டது. 7 நாட்கள் வரை பயன்பாட்டுடன் 205mAh பேட்டரி. Amazfit X ஸ்மார்ட்வாட்ச பிளாக் மற்றும் நியூ மூன் கோல்ட் வண்ணங்களில் வருகிறது.இப்போது இண்டிகோகோ க்ரூட்ஃபண்டிங் மூலம் ஆரம்ப விலையான 149 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பிற்கு ரூ. 11,314 தோராயமாக). இது இண்டிகோகோவில் சில நிமிடங்களில் $20,000 இலக்கைத் தாண்டிவிட்டது. இது ஆகஸ்ட் 2020இல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


