ஒரு நாளைக்கு 2 ஜிபி என ரிலையன்ஸ் ஜியோ 4 நாட்களுக்கு இலவசமாக கொடுக்கின்றது

0
308

சமீபத்தில் கொரோனாவால் வீட்டிலிருந்து மொபைல் இன்டர்நெட் மூலம் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மற்றும் ஒரு சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் 2 ஜிபி இன்டர்நெட்ஐ தினசரி இலவசமாக கொடுக்கலாம் என ‘ஜியோ டேட்டா பேக்’ சலுகையின் கீழ் முடிவு செய்துள்ளது.

இலவச 2 ஜிபி தினசரி டேட்டாவை 4 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.இது ஏப்ரல் 27, 2020 முதல் பயனர்களின் கணக்கை இலவச தரவுகளுடன் வரவு வைக்கத் தொடங்கியது. மேலும் இச்சலுகையை தனது ஜியோ பயன்பாட்டில் உள்ள ‘my jio ’ App மூலம் சரிபார்க்கலாம்.

இந்த கூடுதல் டேட்டா யாருக்கு பொருந்தும் என்றல் தினசரி 1.5 ஜிபி டேட்டா வைத்திருப்பவர்களுக்கு. இவர்களுக்கு கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 3.5 ஜிபி / டேட்டா கிடைக்கும். இதை தொடர்ந்து வோடபோன் அதன் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் இரட்டை டேட்டாவை வழங்குகிறது மேலும் பிற ஆபரேட்டர்கள் விரைவில் அதன் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.