ஒன்பிளஸ் 7T புரோ இந்தியாவில் ரூ.6000 விலைக் குறைப்பு

0
272

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T புரோ ஸ்மாட்போன் முந்தைய விலையிலிருந்து, அதாவது ரூ. 53,999 விலையிலிருந்து ரூ.6000 விலைக் குறைப்பு செய்துள்ளது. தற்பொழுது ஒன்பிளஸ் 7T புரோ விலை ரூ. 47,999. இந்த விலைக் குறைப்பு 7T ப்ரோவின் 8ஜிபி + 256 ஜிபி மட்டுமே பொருந்தும், ஆனால் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷனக்கு பொருந்தாது. இதேபோல் ஒன்பிளஸ் 7T விலை பொருத்தமாட்டில் எந்த மாற்றமும் இல்லை, அதன் விலை ரூ. 34,999. சமீபத்தில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட விலைக் குறைப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கிறது, ஆனால் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பூட்டுதலின் போது “அத்தியாவசியமற்ற” பொருட்களை விற்க முடியாது என்பதால் நீங்கள் இப்போது அதை வாங்க முடியாது. கட்டுப்பாடு நீக்கப்பட்டதும் திருத்தப்பட்ட விலையில் அமேசான் மற்றும் இதர கடைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என ஒன்பிளஸ் நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றன.

ஒன்பிளஸ் 7T புரோவின் முக்கிய அம்மசமான 6.67 அங்குல AMOLED டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது மேலும் இது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ப்ரோசிஸோசாரல் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன அவற்றுள் 48 மெகாபிக்சல் – சோனி IMX586 சென்சார் OIS கேமரா, 16MP 117 ° அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, இது 2.5 மேக்ரோ போட்டோ எடுக்கக்கூடியது, மற்றும் 3x ஆப்டிகல் ஜூமுக்கு 8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, மற்றும் 4085mAh பேட்டரி, வார்ப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது.