6.5-inch டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, நான்கு கேமராகளுடன் ஒப்போ எ52 அறிமுகம்

0
311

ஒப்போ எ12ஐ தொடர்ந்து எ52 என்ற ஸ்மார்ட் போனை ஒப்போ நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. இதில் 6.5 அங்குல எஃப்.எச்.டி + (2400×1080 பிக்சல்கள்) எல்.சி.டி திரையை 90.5% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் உள்ளது, மற்றும் அண்ட்ராய்டு 10 ஐ கலர்ஓஎஸ் 7.1 உடன் இயங்குகின்றது. மேலும் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன அவற்றுள் 12 எம்.பி f/1.8 பிரதான கேமரா, எல்.ஈ.டி ஃபிளாஷ், 8 எம்.பி 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி டெப்த் சென்சார் மற்றும் 2எம்.பி 4cm மேக்ரோ கேமரா உள்ளடக்கியது. இதில் 8 எம்.பி f/2.0 முன் துளை கேமரா உள்ளது.

ஒப்போ எ52 பின் புறம் 3D கிளாஸ் கொண்டுள்ளது, இது கைரேகைகளை ஈர்க்காது என்று நிறுவனம் கூறுகிறது. எல்.சி.டி திரையை கொண்டுள்ளதால் தொலைபேசியில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

அட்ரினோ 610 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 11nm இயங்குதளம் (நான்கு கோர்கள் 2GHz கிரையோ 260 + நான்கு கோர்கள் 1.8GHz கிரையோ 260 ) செயலிகளுடன் இயங்குகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபிஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி உடன் 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி கார்டு மற்றும் இரட்டை சிம் உடன் வருகிறது.

இந்த தொலைபேசி 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோவுடன் வருகிறது, இதன் பரிமாணங்கள்: 162x 75.5 x 8.9 மிமீ மற்றும் எடை: 162 கிராம், இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ac, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஒப்போ எ52 நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது, இதன் விலை 1599 சீன யுவான் (அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 226 / இந்திய மதிப்பிற்கு ரூ. 17,325 தோராயமாக). இது ஏற்கனவே சீனாவில் OPPO கடைகள் மூலமாகவும் விற்பனைக்கு வருகிறது என அறிவித்து இருக்கின்றதது.