
தற்பொழுது 8 நபர்களுடன் ஆடியோ மற்றும் வீடியோ வழியாக உரையாடலம் என்று வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் வெளியிட்டது. வாட்ஸ்அப் இன்று அணைத்து மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் நிறுவனம் சமீபத்தில் புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
முன்பு வரை வாட்ஸ்அப்-இல் 4 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற வரம்பு இருந்தது. இப்போது வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பிற்கான தேவை அதிகரித்துள்ளதால் இன்று முதல் 8 பேர் கொண்ட குழு அழைப்புகளில் பங்கேற்கலாம் என்ற அப்டேட்ஐ அறிமுகப்படுத்தியது.
4 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்தந்த குழுவிலிருந்து நேரடியாக குழு அழைப்பைத் தொடங்கலாம் மற்றும் சேர்க்க வேண்டிய தொடர்புகளை குறிப்பிடவில்லை என்றால் வாட்ஸ்அப் தானாகவே குழு அழைப்பைத் தொடங்கும். இதேபோல், பயனர்கள் ‘அழைப்புகள்’ லிருந்து குழு அழைப்பைத் தொடங்கலாம் மற்றும் பங்கேற்பாளர்களை தனித்தனியாக சேர்க்கலாம்.
இந்த வசதி Android மற்றும் iOS இல் பீட்டா பயனர்களுக்கு உள்ளது. இந்த அப்டேட் Android இல் v2.20.133 பீட்டாவிலும் மற்றும் iOS இல் v2.20.50.25 பீட்டாவிலும் பயனர்களுக்கு வெளிவருகிறது. இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு படிப்படியாக வெளிவருகிறது, மேலும் முழுமையான வெளியீட்டிற்கு நேரம் ஆகலாம். பீட்டா பயனர்களுக்காக இது தொடங்கத் தொடங்கியுள்ளதால், விரைவில் அதை நிலையான பதிப்பிலும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


