
புதிய ரெட்மி 5G ஸ்மார்ட்போன் சீனாவில் TENAAவில் மாடல் எண் M2004J7AC உடன் சான்றிதழ் பெற்றுள்ளது. முந்தைய வதந்திகளின் அடிப்படையில் இது சீனாவில் ரெட்மி Note 10 என வெளியிடப்படலாம். இது 6.57 அங்குல FHD + OLED டிஸ்பிளே, 8GB வரை RAM, 48 எம்பி டிரிபிள் ரியர் கேமராக்கள், 16 எம்பி முன் கேமரா மற்றும் 4500mAh பேட்டரி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. 3C சான்றிதழ் ஏற்கனவே தொலைபேசியில் 22.5W வேகமான சார்ஜிங் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பின்புறத்தில் உள்ள ரெட்மி நோட் 9 சீரிஸைப் போன்றது, ஆனால் முன்பக்கத்தில் இது பஞ்ச்-ஹோலுடன் ஒப்பிடும்போது வாட்டர் டிராப் நாட்ச் கொண்டுள்ளது.
ரெட்மி Note 10 5G எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
- 6.57-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) FHD + OLED டிஸ்பிளே
- 2.6GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி (820?) Processor
- 64GB சேமிப்பகத்துடன் 4GB/6GB ரேம், 128GB/256GB சேமிப்பகத்துடன் 8GB RAM, மைக்ரோ எஸ்.டி உடன் 2 டிபி வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
- இரட்டை சிம் கார்டுகள்
- MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10
- 48 MP பின்புற கேமராக்கள், எல்.ஈ.டி ஃபிளாஷ், EIS, அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்சார்
- 16MP முன் கேமரா
- இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், IR சென்சார்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ
- பரிமாணங்கள்: 164.15 × 75.75 × 8.99 mm; எடை: 206 கிராம்
- 5G SA / NSA, இரட்டை 4G வோல்ட்இ, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C
- 22.5W வேகமான சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி
ரெட்மி Note 10 5G பற்றி மேலும் பலதகவல்களையும், வெளியாகும் தேதியையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.


