ஹீலியோ ஜி80, 5020 mAh பேட்டரி கொண்ட ரெட்மி 9 விரைவில் அறிமுகம்

0
280

பல வதந்திகளுக்குப் பிறகு ரெட்மி 9 ஆன்லைனில் முழுமையான விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இது 6.53 அங்குல முழு எச்டி + எல்சிடி வாட்டர்-டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி 80 8nm SoC, 13 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் 118 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 5 மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் 18W வேகமான சார்ஜிங்கில் 5020 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ரெட்மி 9 விவரக்குறிப்புகள்

  • 6.53-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) FHD+ LCD டிஸ்பிளே
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 12nm Processor (டூயல் 2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ 75 + ஹெக்ஸா 2 ஜிஹெர்ட்ஸ் 6 எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ 55 சிபியுக்கள்) 1000 மெகா ஹெர்ட்ஸ் ARM மாலி-ஜி 52 2EEMC2 GPU
  • 32GB (eMMC 5.1) சேமிப்பகத்துடன் 3GB LPPDDR4x RAM,64GB (eMMC 5.1) சேமிப்பகத்துடன் 4GB LPPDDR4x RAM, மைக்ரோ எஸ்.டி உடன் 512GB வரை விரிவாக்கக்கூடியது
  • இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி)
  • MIUI 11 உடன் Android 10, MIUI 12 க்கு மேம்படுத்தக்கூடியது
  • 13MP f/2.2 பின்புற கேமரா, எல்இடி ஃபிளாஷ்,8MP f/2.2 118 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP டெப்த் மற்றும் 5MP f/2.4 4cm மேக்ரோ கேமரா
  • 8MP முன் கேமரா
  • கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • பரிமாணங்கள்: 163.32 x 77.01 x 9.1 mm எடை: 198 கிராம்
  • இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5020 mAh பேட்டரி

ரெட்மி 9 ஓஷன் கிரீன், சன்செட் பர்பில் மற்றும் கார்பன் கிரே வண்ணங்களில் வருகிறது மற்றும் 32 ஜிபி சேமிப்பு கொண்ட 3 ஜிபி ரேமுக்கு 10659 ரூபிள் (அமெரிக்க $ 155 / ரூ. 11,723 தோராயமாக) / 7,350 பிலிப்பைன் பெசோ (அமெரிக்க $ 147 / ரூ. 11,150 தோராயமாக) பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.