ஒன்பிளஸ் 8, 8 ப்ரோ இந்தியாவில் மே 29 விற்பனைக்கு வருகிறது

0
198

சில வாரங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் இந்தியவில் ஒன்பிளஸ் 8 ரூ. 41,999 மற்றும் ஒன்பிளஸ் 8 Pro ரூ. 54,999 விற்கப்படபோவதக இருந்தது இருப்பினும் அந்த நேரத்தில், நீட்டிக்கப்பட்ட கொரோன பிரச்சனை காரணமாக விற்பனை தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. இறுதியாக ஒன்பிளஸ் ஒரு சமூக இடுகையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 Pro இரண்டும் இந்தியாவில் முதல் விற்பனையை மே 29 முதல் அமேசான் மற்றும் சில்லறை கடைகளில் தொடங்கும் என்று அறிவித்தது.

முதன்முறையாக, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 Pro போன்களுக்கு வரையறுக்கப்பட்ட பதிப்பான பாப் அப் பாக்ஸ்-ஐ அறிமுகப்படுத்துகிறது. இதில் போன், ஒரு ஜோடி புல்லட் வயர்லெஸ் Z (பிளாக்) இயர்போன்கள், ஒரு சியான் பம்பர் கேஸ் மற்றும் கார்பன் பம்பர் கேஸ் உள்ளது. ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கான பிரத்யேக விற்பனைக்கு பாப்-அப் பாக்ஸ்-ஐ 2020 மே 28 அன்று ரூ .45,999 முதல் தொடங்கும்.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5 ஜி வெளியீட்டு சலுகைகள்:

  • ரூ. 3000 / – ஒன்பிளஸ் 8 Pro 5 ஜி மீது உடனடி தள்ளுபடி மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது ஒன்பிளஸ் 8 5 ஜி மீது ரூ.2000 உடனடி தள்ளுபடி.
  • பிரபலமான வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது oneplus.in மற்றும் Amazon.in முழுவதும் 12 மாதங்கள் வரை விலை இல்லாத EMI. கூடுதலாக, பயனர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களிலும் 12 மாதங்கள் வரை விலை இல்லாத EMI பெறலாம்.
  • பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் பயனர்கள் இப்போது மொத்த மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு போன்களை வாங்கலாம் மீதமுள்ள தொகையை 12 மாத காலப்பகுதியில் குறைந்த மாத தவணைகளில் செலுத்தலாம்
  • ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5 ஜி வாங்குவதில் டிஸ்பிளே பாதுகாப்பு திட்டத்தில் 10% தள்ளுபடி பெறுகிறார்கள்

ஒன்பிளஸ் 8 ஓனிக்ஸ் பிளாக், கிளாசில் பச்சை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பளபளப்பு நிராகங்களிள் ரூ. 41,999 முதல் ரூ. 49,999 வரையிலும் ஒன்பிளஸ் 8 Pro ஓனிக்ஸ் பிளாக், கிளாசில் பச்சை மற்றும் அல்ட்ராமரைன் ப்ளூ நிராகங்களிள் ரூ. 54,999 முதல் ரூ. 59,999 வரையிலும் விற்கப்படுகிறது.