15 நிமிடங்களில் 0 முதல் 50% வரை பாஸ்ட் சார்ஜிங் – குவால்காம் குயிக் சார்ஜ் 3+ அறிமுகம்

0
196

குவால்காம் குயிக் சார்ஜ் 3-ஐ 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது, குவால்காம் 2016இல் குயிக் சார்ஜ் 4 மற்றும் 2017 இல் குயிக் சார்ஜ் 4+ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இப்போது குவால்காம் குயிக் சார்ஜ் 3+ அறிவித்துள்ளது. இது 15 நிமிடங்களில் 0% முதல் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். இது மற்றும் முந்தைய பாஸ்ட் சார்ஜிங்யை ஒப்பிடும்போது 35% வேகமானது, 9° செல்சியஸ் வெப்பநிலை குறைவானது.

குயிக் சார்ஜ் 4-லிருந்து 20mV படிகளுடன் அளவிடக்கூடிய மின்னழுத்தத்தை ஆதரிக்கும் நிலையான USB-A to C வகை கேபிள்கள்பயன்படுத்தலாம். குயிக் சார்ஜ் 3+ முதலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 & ஸ்னாப்டிராகன் 765G யால் இயங்கும் போனில் கிடைக்கும் அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் வரவிவிருக்கும் புதிய ஸ்னாப்டிராகன் ப்ரோசிஸோர்களுக்கும் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 765G ஆல் இயக்கப்படும் சியோமியின் Mi 10 Lite (Mi 10 யூத் எடிஷன்) உலகின் குயிக் சார்ஜ் 4+ மற்றும் குயிக் சார்ஜ் 3+ இரண்டையும் பெற்றுள்ள உலகின் முதல் ஸ்மார்ட்போனாகும்.