ஸ்னாப்டிராகன் 765ஜி, 6.8-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவுடன் LG VELVET அறிமுகம்

0
284

LG VELVET என்ற 5G ஸ்மார்ட்போனை மே 7 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக எல்ஜி சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியுள்ளது. இப்பொழுது இதன் முழு விவரங்களை வெளியிட்டுள்ளது. இது 6.8-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) FHD+ 20.5: 9 விகித OLED டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் உடன் 16 மெகாபிக்சல் முன் கேமரா, 48MP பின்புற கேமரா, 8MP அல்ட்ரா வைட் லென்ஸ், 5MP டெப்த் சென்சார், ஸ்னாப்டிராகன் 765ஜி ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த போன் 3D ஆர்க் டிசைன்’ கொண்டுள்ளது. அதாவது டிஸ்ப்ளேயில் இடது மற்றும் வலது முனைகளை மெதுவாக வளைவாக உள்ளது மற்றும் பின்புறமும் அதே கோணத்தில் வளைந்து காணப்படுகிறது.இது ஒரு நீண்ட வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது மேலும் ஒவ்வொரு மூலையிலும் ஒரு உலோக சட்டத்தைக் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் (1 x 2.4GHz + 1 x 2.2GHz + 6 x 1.8GHz க்ரையோ 475 CPU கள்) அட்ரினோ 620 GPU உடன் ஸ்னாப்டிராகன் 765G 7nm EUV processor மேலும் 8 GB RAM/128 GB ROM, மைக்ரோ SD உடன் 1TB வரை விரிவாக்கக்கூடிய தன்மை கொண்டது.10w வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4300mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 10-இல் இயங்குகிறது.

இதன் முக்கிய அம்சமான இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5G SA / NSA, இரட்டை 4G வோல்ட்இ, Wi-Fi 802.11 புளூடூத் 5.1, GPS / GLONASS / Beidou, NFC, USB Type-C, இரட்டை சிம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

LG VELVET அரோரா ஒயிட், அரோரா கிரே, அரோரா கிரீன் மற்றும் இல்லுஷன் சன்செட் வண்ணங்களில் வருகிறது மற்றும் மே 15 முதல் தென் கொரியாவில் விற்கப்பட உள்ளது. இதன் விலை மே 7 ஆம் தேதி அறிவிக்கப்படும்.