
ஹவாய் இன் ஹானர் பிராண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 9X Pro ஸ்மார்ட்போனை உலக சந்தைகளுக்காக அறிமுகப்படுத்தியது 3 மாதங்களுக்குப் பிறகு இப்போது நிறுவனம் ஹானர் 9X Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜனவரி மாதம் கிரின் 710 processor உடன் ஹானர் 9X அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இது வருகிறது.
ஹானர் இந்தியா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நீங்கள் எதை விரும்பினாலும், கிரின் 810 உடன் உங்களுக்குத் தேவையான வேகத்தைப் பெறுங்கள். வெளியீட்டு தேதி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் மே 12 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
இதன் விலை ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை நிர்ணயக்கக்கூடும். Google Play சேவைகள் மற்றும் Play Store க்கு பதிலாக ஹவாய் AppGallery உடன் செயல்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை விவரக்குறிப்புகள் மூலம் அறிந்து கொள்வோம்.
ஹானர் 9X Pro விவரக்குறிப்புகள்
- 6.59-இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) FHD+ 19.5: 9 2.5D வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 810 7nm (2x 2.27GHz கார்டெக்ஸ்- A76 +6 x 1.88GHz கார்டெக்ஸ்- A55) processor, ARM மாலி- G52 MP6 GPU
- 6GB RAM, 256GB சேமிப்பு, மைக்ரோ எஸ்.டி உடன் 512GB வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
- EMUI 9.1.1, HMS உடன் ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
- இரட்டை சிம் கார்டுகள்
- 48MP f /1.8 கேமரா, LED பிளாஷ், 8MP f/2.4 அல்ட்ரா-வைட் சென்சார், 2MP f/2.4 டெப்த் சென்சார்
- 16MP f /2.2 முன் எதிர்கொள்ளும் கேமரா
- பரிமாணங்கள்: 163.1 × 77.2 × 8.8mm; எடை: 206 கிராம்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- இரட்டை 4 ஜி வோல்ட்இ, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0 LE, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, USB Type-C
- 4000mAh பேட்டரி, 10W சார்ஜிங்


