ஸ்னாப்டிராகன் 865, 108MP கேமரா கொண்ட Mi 10 5G இந்தியாவில் மே 8 அறிமுகம்

0
252

சியோமி Mi 10 5G மே 8 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாகவும் மேலும் இந்த போன் அமேசான்-இல் விற்பனைக்கு வரும் என்றும் சியோமி உறுதிப்படுத்தியுள்ளது.இதன் விலை 3999 சீன யுவான் (US$564 / ரூ. 42,385 தோராயமாக) தொடங்கும் என நிறுவனம் கூறுகின்றது. இன்னும் சில தினங்களில் இதன் அதிகாரப்பூர்வ விலையை நாம் அறிந்து கொள்ளளாம்.

சியோமி Mi 10 5G விவரக்குறிப்புகள் பின்வருவன:

  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.67-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) FHD+ அமோலேட் 19.5: 9 விகிதம் HDR 10 + 90Hz டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் (1 x 2.84GHz + 3 x 2.42GHz + 4 x 1.8GHz Hexa) அட்ரினோ 650 GPU உடன் ஸ்னாப்டிராகன் 865 7nm processor
  • 128 ஜிபி / 256 ஜிபி UFS 3.0 சேமிப்பகத்துடன் 8 ஜிபி LPPDDR5 RAM மற்றும் 256 ஜிபி UFS 3.0 சேமிப்பகத்துடன் 12 ஜிபி LPPDDR5 RAM
  • இரட்டை சிம் (நானோ + நானோ)
  • ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 11.
  • 108MP பின்புற f/1.69 கேமரா, OIS, 8P லென்ஸ்,13MP 123° f /2.4 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்,  2MP f/2.4 டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் , 30fps இல் 8k, 4k 60fps, 720p இல் 960fps
  • 20MP முன் கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், infrared சென்சார்.
  • USB Type-C ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, 1216 1.0 சிசி ஸ்பீக்கர்.
  • பரிமாணங்கள்: 162.6 × 74.8 × 8.96 மிமீ மற்றும் எடை: 208 கிராம் ஆகும்.
  • 5G SA / NSA இரட்டை 4G வோல்ட்இ, wifi 6 802.11ax (2.4GHz + 5GHz) 8 x / MU-MIMO, புளூடூத் 5.1, GPS,NFC, USB Type-C
  • 30W குயிக் சார்ஜ் 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், 10w வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 4780mAh பேட்டரி